கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா

0 10133
கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா

கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினின் குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அஸ்வினின் மனைவி ப்ரித்தி, ஒரே வாரத்தில் தங்களது குடும்பத்தில் உள்ள 6 பெரியவர்கள் மற்றும் 4 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், பாதிக்கப்பட்ட அனைவரும் வெவ்வேறு வீடுகள் மற்றும் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனாவை எதிர்த்து போராட ஒரே வழி கொரோனா தடுப்பூசி மட்டுமே எனக் கூறியுள்ள ப்ரித்தி, உடல்வலிமையை விட மன வலிமையே கொரோனாவிலிருந்து மீட்கும் என்றும், தனக்கு 5 முதல் 8 நாட்கள் மிகவும் மோசமானதாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments