தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை

0 1598
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை

மிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளநிலையில், தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை நடத்தியது.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இதற்காக தேர்தல் ஆணையம் முழுமையான ஏற்பாடுகளை செய்துள்ளது. முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தி, தேவைப்படும் இடங்களில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து 5 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுடன், காணொலியில் தேர்தல் ஆணைய தலைமை ஆலோசனையில் ஈடுபட்டது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மற்றும் தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் வாக்கு எண்ணிக்கைகான கால அளவு குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments