பி.பி.இ. உடை அணிந்து வியர்வையால் நனைந்த கொரோனா சிகிச்சை பிரிவு மருத்துவர்..! நாட்டுக்காக பணியாற்றுவதில் பெருமைப்படுவதாக பெருமிதம்

0 2864
பி.பி.இ. உடை அணிந்து வியர்வையால் நனைந்த கொரோனா சிகிச்சை பிரிவு மருத்துவர்..! நாட்டுக்காக பணியாற்றுவதில் பெருமைப்படுவதாக பெருமிதம்

கொரோனா சிகிச்சை பிரிவில் பணிபுரியும் குஜராத்தைச் சேர்ந்த மருத்துவரின் புகைப்படங்கள், பி.பி.இ. உடையில் முன்கள பணியார்கள் படும் கஷ்டத்தை கண் முன்னே நிறுத்துவதாக உள்ளது.

கொரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவர்கள், செவிலியர்கள் பல இன்னல்களுக்கு இடையே பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், குஜராத்தைச் சேர்ந்த மருத்துவர் ஷோஹில், கொரோனா கவச உடையுடன் இருக்கும் தனது புகைப்படத்தையும், கவச உடையை கழட்டிய பின்னர் வியர்வை வழிய, உடை முழுவதும் வேர்வையால் நனைந்திருக்கும் புகைப்படத்தையும் இணைத்து நாட்டிற்காக கடமையாற்றுவதில் பெருமைப்படுகிறேன் என்ற பதிவுடன் வெளியிட்டுள்ளார்.

மருத்துவரின் இந்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், கொரோனாவை விரட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments