”இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்தால் 5 ஆண்டுகள் சிறை” -ஆஸ்திரேலியா அரசு

0 15802
”இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்தால் 5 ஆண்டுகள் சிறை” -ஆஸ்திரேலியா அரசு

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவுடனான நேரடி விமான சேவையை தடை செய்த போதிலும் லிங்க் சேவையை பயன்படுத்தி தோஹா வழியாக ஆஸ்திரேலியாவுக்கு பலர் வருவதாகவும், இதனால் அங்கு கொரோனா பரவல் அதிகரித்திருப்பதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனால் 14 நாட்களுக்குள் இந்தியாவுக்கு சென்று திரும்பிய யாரும் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்யக் கூடாது என அறிவித்துள்ள ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை, தடையை மீறி ஆஸ்திரேலியாவுக்குள் வந்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 48 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கைவிடுத்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் மே 3 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments