தடுப்பூசி பற்றாக்குறையால் தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி இயக்கம் துவங்கவில்லை

0 1360
தடுப்பூசி பற்றாக்குறையால் தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி இயக்கம் துவங்கவில்லை

மிழகத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி திட்டமிட்டப்படி தொடங்கவில்லை.

இன்று முதல் 18 வயது மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்ததையடுத்து, தகுதியுடையவர்கள் கோவின் செயலியில் முன்பதிவு செய்ய தொடங்கினர்.

இதனிடையே மத்திய அரசிடம் கோரியிருந்த ஒன்றரை கோடி டோஸ் தடுப்பு மருந்து தற்போது வரை தமிழகத்திற்கு வந்துசேரவில்லை. இதனால் தமிழகத்தில் 18 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை.

இருப்பு உள்ள தடுப்பு மருந்துகள் மூலம் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தொடர்ந்து தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments