தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.292 கோடிக்கு மது விற்பனை

0 1399
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.292 கோடிக்கு மது விற்பனை

மிழகத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் 292 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது.

தொழிலாளர் தினம் மற்றும் வாக்கு எண்ணிக்கையை ஒட்டி இன்றும், நாளையும், டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால், வெள்ளிக்கிழமையான நேற்று மதுவிற்பனை சூடுபிடித்துள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 292 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் 63 கோடிரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில் 56 கோடி ரூபாய்க்கும் மது விற்பனையாகியுள்ளது.

சேலம் மண்டலத்தில் 55 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் 59.63 கோடிக்கும், கோவையில் 56 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது.

கடந்த 5 நாட்களில் இதுவரை இல்லாத அளவில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments