மேற்கு வங்கத்தில் இன்றுமுதல் மறு அறிவிப்பு வரும் வரை பகுதியளவு ஊரடங்கு

0 2129
மேற்கு வங்கத்தில் இன்றுமுதல் மறு அறிவிப்பு வரும் வரை பகுதியளவு ஊரடங்கு

மேற்கு வங்கத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை பகுதியளவு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், அழகு நிலையங்கள், முடி திருத்தகங்கள், திரையரங்குகள், மது விடுதிகள் மூடப்பட்டுள்ளன. உணவுகள், இன்றியமையாப் பொருட்களை இணைய வழியாக ஆர்டர் செய்பவர்களுக்கு வீடுகளுக்குச் சென்று வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

சந்தைகளைக் காலை 7 மணி முதல் 10 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரையும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. சமூக, பண்பாட்டு, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்துக் கடைகள், மளிகைக் கடைகளுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments