வாலிபங்கள் ஓடும்... வயதாக கூடும்... ஆனாலும், அன்பு மாறாதது... வார்த்தைகளை மெய்ப்பித்த முதியவர்

0 4606
மனைவிக்கு தடுப்பூசி செலுத்த தூக்கி செல்லும் முதியவர் ஜெகநாதன்

கோவை அருகே நடக்க முடியாத தன் மனைவியை குழந்தை போல தூக்கி சென்று கொரோனா தடுப்பூசி போட வைத்த முதியவரின் செயல் அனைவரையும் நெகிழ வைத்தது.

கோவையை அடுத்த துடியலூர் என்.ஜி.ஓ காலனியை சேர்ந்தவர் 76 வயது முதியவர் ஜெகநாதன். இவருக்கு 69 வயது நிரம்பிய விஜயலட்சுமி என்ற மனைவி உண்டு. விஜயலட்சுமிக்கு நடக்க முடியாது. இதனால், கணவர் ஜெகநாதன்தான் மனைவியை குழந்தை போல பார்த்துக் கொண்டார்.

இந்த நிலையில், கொரோனா காரணமாக முதியவர்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தனர். இதனால், தனக்கும் மனைவிக்கும் அருகிலுள்ள இரண்டு முதியவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட முதியவர் ஜெகநாதன் முடிவு செய்தார். இதற்காக , துடியலூர் அரசு மருத்துவமனையில் ஜெகநாதன் டோக்கன் வாங்கியிருந்தார்.

பிறகு, தன் மனைவிக்கு நடக்க முடியாது என்தால், தன் கையிலேயே குழந்தை போல தூக்கி காரில் வைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். மருத்துவமனையிலும் காரிலிருந்து மனைவியை இறக்கி தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குள் சென்றார். ஸ்ட்ரெச்சர் எதையும் ஜெகநாதன் எதிர்பார்க்கவில்லை.

மருத்துவமனையில் கூட்டம்  அதிகமாக இருந்ததால், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியது இருந்தது. இதனால், தன் மனைவிக்கு சேர் ஒன்றை எடுத்து வந்து போட்ட ஜெகநாதன் அமர வைத்தார்.

பின்னர் , தடுப்பூசி செலுத்திய பிறகும் தன் மனைவியை தன் கைகளில் தூக்கிக் கொண்டு காரில் வைத்து தன் வீட்டுக்கு அழைத்து சென்றார்ஜெகநாதன். வயதான காலத்தின் தன் மனைவி மீது ஜெகநாதன் காட்டிய அக்கறையும் அன்பும் மருத்துவமனையில் இருந்தவர்களை நெகிழ வைத்து விட்டது. வயது, இளமை எல்லாவற்றையும் தாண்டி அன்பு ஒன்றுதான் வாழ்க்கையின் அச்சாணி என்பதை விளக்குவது போன்று இந்த சம்பவம் அமைந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments