"கொரோனா தொற்றினால் இந்தியா மோசமான கட்டத்தில் உள்ளது" - அமெரிக்கா

0 1057

கொரோனா காலகட்டத்தில் இந்தியா மிகவும் மோசமான கட்டத்தில் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கொரோனா மற்றும் சுகாதார பாதுகாப்பிற்கான ஒருங்கிணைப்பாளர் கெய்ல் இ ஸ்மித் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கொரோனா தொற்றின் எழுச்சி தன்னை மிகவும் பயம் கொள்ளச் செய்வதாக அவர் குறிப்பிட்டார்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெருந்தொற்றின் பாதிப்பு மோசமான கட்டத்தில் இந்தியா இருப்பதை உணர்த்துவதாகக் குறிப்பிட்ட கெய்ல், கொரோனா நெருக்கடி இன்னும் உச்சகட்டத்தை அடையவில்லை என்றும் தெரிவித்தார்.

கொரோனாவை எதிர்கொள்வதில் அமெரிக்கா தொடர்ந்து உலகத்தை வழிநடத்தும் என்று குறிப்பிட்ட அவர், இந்தியாவுக்கு தேவைப்படும் உதவிகளைச் செய்ய பிடன் நிர்வாகம் தயாராக இருப்பதாகவும் கெய்ல் இ ஸ்மித் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments