கொரோனா பாதிப்பில் இந்தியா மோசமான உலகசாதனை..! ஒரே நாளில் 4 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று

0 6921
கொரோனா பாதிப்பில் இந்தியா மோசமான உலகசாதனை..! ஒரே நாளில் 4 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று

இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவாக 4லட்சத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் வேகம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு விபரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 4லட்சத்து ஆயிரத்து 993 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் பெருந்தொற்றுக்கு 3ஆயிரத்து523 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம், கொரோனா பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வந்த 2லட்சத்து99ஆயிரத்து 988 பேர் கடந்த 24 மணி நேரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

அதன் மூலம் இதுவரை கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 56லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் 32,68,710 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 15கோடியே 49லட்சத்து89ஆயிரத்து635 பேருக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments