ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் ரூ.50ஆக உயர்த்தப்பட்டதை மே 31ந்தேதி வரை நீட்டித்தது தென்மேற்கு ரயில்வே

0 851
ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் ரூ.50ஆக உயர்த்தப்பட்டதை மே 31ந்தேதி வரை நீட்டித்தது தென்மேற்கு ரயில்வே

யில் நடைமேடை நுழைவுச் சீட்டு 50 ரூபாயாக உயர்த்தப்பட்டதை மே 31-ஆம் தேதி வரை நீட்டித்து தென்மேற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியான அறிக்கையில்,கொரோனா பெருந்தொற்று பரவலைத் தடுப்பதற்காக, ரயில் நிலையங்களில் மக்கள் நடமாட்டத்தை குறைக்கும் நோக்கத்தில் பெங்களூரில் உள்ள கே.எஸ்.ஆர். பெங்களூரு, கண்டோன்மென்ட், யஷ்வந்த்பூர், கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையங்களில் நடைமேடை நுழைவுச்சீட்டு கட்டணம் 10ரூபாயில் இருந்து 50 ரூபாயாக உயர்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அது ஏப்ரல் 30-ஆம் தேதி வரை அமல்படுத்துவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments