அஜீத் 50 வது பிறந்த நாள் கொண்டாட்டம்..!

0 11338
அஜீத் 50 வது பிறந்த நாள் கொண்டாட்டம்..!

கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டை தள்ளி வைப்பதாக  நடிகர் அஜீத் அறிவித்திருந்த நிலையில், அஜீத்தின் 50 வது பிறந்த நாளையொட்டி வாழ்த்துக்களால் அவரது ரசிகர்கள் டிவிட்டரை தெறிக்கவிட்டுக்கொண்டிருக்கின்றனர்.

அஜீத்திற்கு வயது 50.....! உடலில் வலிகள் நிறைந்த நாயகன் என்பதாலோ என்னவோ அஜீத்தே விரும்பா விட்டாலும் அவரது வலிமையை , படத்தின் அப்டேட் கேட்டு பிரபலங்களை பிரமிக்க வைத்தவர்கள் அவரது ரசிகர்கள்..!

ஒரு விழாவில் அஜீத் என்ற பெயரை நடிகர் விவேக் கூற முன்னனி நட்சத்திரங்கள் நிறைந்திருந்த அந்த அரங்கத்தில் முரட்டு ரசிகர்களின் ஆரவாரம் அடங்க வெகு நேரம் பிடித்தது..!

இத்தனைக்கும் ஒரே காரணம் சாதாரண பைக் மெக்கானிக்காக வாழ்க்கையை தொடங்கி, கதாநாயகனாகி, திரையுலகில் அல்டிமேட் ஸ்டாரானாலும் இது தான் ஆரம்பம் என ரசிகர் மன்றங்களை கலைத்து பொது இடங்களில் எளிமையான அணுகு முறையால் பலரது மனங்களிலும் தலை நிமிர்ந்து நிற்பவர் அஜீத்..!

சத்தமில்லாமல் பல உதவிகள் செய்து வந்தாலும், அதனை வைத்து அரசியல் செய்யாமல் இருப்பதே பலருக்கு அஜித்தை பிடித்து போக வைத்து விடுகின்றது. வெற்றிகளை மட்டுமே பார்க்கும் திரையுலகில் பல தோல்வி படங்களை கொடுத்தவன் என்று தன்னம்பிக்கையுடன் ஒப்புக் கொண்டு தனிவழியில் பயணிக்கும் அஜீத்திற்கு 50 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்து டெம்ப்ளேட்டுகளால் டுவிட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர்

அஜித் என்ற ஹேஷ்டாக் இந்திய அளவில் முதலிடத்தில் டிரெண்டாகி வருகின்றது. தமிழக அஜீத் ரசிகர்கள் மட்டுமல்ல, கேரளம் , கர்நாடகம், தெலுங்கு அஜீத் ரசிகர்களும் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர்

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள், தெலுங்கு நடிகர் பவன்கல்யான் மற்றும் மகேஷ்பாபு ரசிகர்களும் அஜீத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

கொரோனாவால் மக்கள் கடுமையாக பதிப்புக்குள்ளாகி இருக்கும் நிலையில் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்டு ரசிகர்கள் அதை கொண்டாடினால் சரியாக இருக்காது என்பதை உணர்ந்து , முன் கூட்டியே தள்ளி வைத்து தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை அஜீத் சாதுர்யமாக தவிர்த்தாலும் நாடே சொல்கின்றது ஹாப்பி பெர்த் டே அஜீத்...!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments