கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க வாய் வழியாக கொடுக்கப்படும் மருந்து 2021 ஆம் ஆண்டின் இறுதியில் தயாராகி விடும் : ஃபைசர் சி.இ.ஓ

0 3340

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க, வாய் வழியாக கொடுக்கப்படும் மருந்து 2021 ஆம் ஆண்டின் இறுதியில் தயாராகி விடும் என்று பைசர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆல்பர்ட் போர்லா தெரிவித்துள்ளார்.

இப்போது செயல்படும் வேகத்திலேயே எல்லாம் நல்ல படியாக நடந்தால், அமெரிக்க மருந்து கட்டுப்பாடு அமைப்பும் விரைவில் ஒப்புதல் அளித்தால், இது சாத்தியமாகும் என்று அவர் தெரிவித்தார். அமெரிக்காவை சேர்ந்த முன்னணி மருந்து நிறுவனமான பைசர் கொரோனா தொற்று பாதிப்பு சிகிச்சைக்காக வாய் வழி மற்றும் ஊசி மூலம் செலுத்தும் மருந்துகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

பைசர் மற்றும் பயோ-என்-டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments