நாளை இந்தியா வர இருக்கிறது ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி !

0 2312

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி நாளை இந்திய வர இருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஸ்புட்னிக் தடுப்பூசியின் முதல் தொகுப்பு நாளை ஹைதராபாத் வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு என இரண்டு தடுப்பூசிகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ள நிலையில், 3வதாக ஸ்புட்னிக் தடுப்பூசியும் வருவதால், தடுப்பூசி போடும் இயக்கத்திற்கு உத்வேகம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மே மாதத்தின் தொடக்கத்தில் 2 லட்சம் தடுப்பூசிகளும், அடுத்த மாதம் 50 லட்சம் தடுப்பூசிகளும் இறக்குமதி செய்யப்பட உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments