கொரோனா நிவாரண பணிகளுக்கு, நிவாரண உதவி வழங்கும் ஐபிஎல் வீரர்கள்!

0 2961

ஐபிஎல் போட்டி ஊதியத்தில் பத்து சதவிதத்தை கொரோனா நிவாரண பணிகளுக்கு வழங்க உள்ளதாக ராஜஸ்தான் அணி வீரர் ஜெயதேவ் உனட்கட் அறிவித்துள்ளார்‍.

கொல்கத்தா அணி வீரரும், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளருமான பேட் கம்மின்ஸ் பிரதமரின் நிவாரண நிதிக்கு 37 லட்ச ரூபாயை நிவாரணமாக வழங்கினார்‍. இதனையடுத்து மேற்கு இந்திய தீவுகளைச் சேர்ந்தவரும் பஞ்சாப் அணி வீரரான நிக்கோலஸ் பூரணும் உதவிக்கரம் நீட்ட முடிவு செய்துள்ளார்‍.

இந்நிலையில் ராஜஸ்தான் அணி வீரர் ஜெயதேவ் உனட்கட் , ஐபிஎல் போட்டி ஊதியத்தில் கிடைக்கும் தொகையில் 10 சதவிதத்தை வழங்குவதாக  அறிவித்துள்ளார்‍. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments