தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 18 ஆயிரத்தை தாண்டியது

0 2886

தமிழ்நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 18 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12 வயதுக்கு உட்பட்ட 583 குழந்தைகள் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக 18,692 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. பெருந்தொற்று பாதிப்பிலிருந்து, 16,007 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்92 வயதுசென்னை முதியவர், 91 வயது தஞ்சாவூர் மூதாட்டி, 21 வயது கிருஷ்ணகிரி இளைஞர் உள்பட கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில், 113 பேர் உயிரிழந்தனர்.

மேற்குவங்காளம் உள்பட வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வந்த 27 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னை பெருநகரில், மேலும் 5473 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 1215 பேருக்கும், கோயம்புத்தூரில் 1113 பேருக்கும் புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது.

திருவள்ளூர் - 905, மதுரை - 691, திருநெல்வேலி - 644 , தூத்துக்குடி - 579, ஈரோடு - 519 , திருச்சி - 450மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் - 445 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஒரே நாளில், 12 வயதுக்குட்பட்ட 583 சிறுவர், சிறுமிகளுக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிக்கையின்படி, 1,15,128 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிரார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments