திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் 15 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

0 2103
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பணிபுரியும் ஊழியர்கள் 300க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 15 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பணிபுரியும் ஊழியர்கள் 300க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 15 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், பர்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே தேவஸ்தான ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்றுவருவதாகவும், இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.

திருப்பதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவருவதால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments