"நீங்க என்னைச் சுடுறீங்களா, இல்லை நான் உங்களைச் சுடுறேனா பார்த்து விடுவோம்"... குடிபோதையில் போலீசாரை மிரட்டிய அரசியல் கட்சி பிரமுகர்

0 4653
"நீங்க என்னைச் சுடுறீங்களா, இல்லை நான் உங்களைச் சுடுறேனா பார்த்து விடுவோம்"... குடிபோதையில் போலீசாரை மிரட்டிய அரசியல் கட்சி பிரமுகர்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவல்நிலையம் முன்பு நின்றுகொண்டு குடிபோதையில் போலீசாரை சுட்டுவிடுவதாக அலப்பறை செய்த அரசியல் கட்சிப் பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற கடந்த 6ஆம் தேதி ஒட்டன்சத்திரம் காந்தி நகர் 6வது வார்டைச் சேர்ந்த அதிமுகவினர் சிலர் திமுகவினரைத் தாக்கியதாக 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்தப் பனிரெண்டு பேரில் ஈஸ்வரன் என்பவர் நேற்றிரவு ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்துக்கு குடிபோதையில் வந்து ரகளையில் ஈடுபட்டார்.

சார்பு ஆய்வாளர் கணேசனை ஒருமையில் வசைபாடிய ஈஸ்வரன், போலீசார் தன்னைச் சுடுகிறார்களா இல்லை அவர்களை நான் சுடுகிறேனா என்று ஒரு கை பார்த்துவிடுவோம் என சலம்பினார். ஈஸ்வரனுடன் வந்த ஒருவர் அவரை எவ்வளவோ சமாதானம் செய்ய முயற்சித்த போதும் முடியாத நிலையில், போலீசார் ஈஸ்வரனை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments