கருத்து கணிப்பு எந்த காலத்திலும் எடுபடாது: அமைச்சர் ஜெயக்குமார்

0 2618
கருத்து கணிப்பு என்பது எந்த காலத்திலும் எடுபடாத ஒன்று என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

கருத்து கணிப்பு என்பது எந்த காலத்திலும் எடுபடாத ஒன்று என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் அமைச்சர் ஜெயக்குமார்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கருத்து கணிப்பு என்பது எந்த காலத்திலும் எடுபடாத ஒன்று என்றும், அதிமுக, மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என்றும் கூறினார்.

மேலும் 200 பேரிடம் கருத்துக்களை கேட்டுவிட்டு, கருத்து கணிப்பு வெளியிடப்படுகிறது. எனவே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு, பொதுமக்கள் மகிழ்ச்சி பெறும் வகையில் அதிமுக மீண்டும் ஆட்சியை அமைக்கும் என்று தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், தபால் வாக்குகளில் கடந்த காலங்களில் என்ன நடைமுறை பின்பற்றப்பட்டதோ அதையே தான் பின்பற்ற வேண்டும் என்றும், தபால் வாக்குகளை முதலில் தான் என்ன வேண்டும் எனவும், ஏற்கனவே பின்பற்ற நடைமுறை தான் வேண்டும் என்று கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments