தீக்குளிக்க முயன்ற பெண்... உடைபட்ட பெண் காவலரின் மண்டை

0 9445
தீக்குளிக்க முயன்ற பெண்... உடைபட்ட பெண் காவலரின் மண்டை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே இரு கிராம மக்களுக்கு இடையிலான பிரச்சனையில் தீக்குளிக்க முயன்ற பெண்ணை தடுக்க முயன்ற பெண் காவலரின் மண்டை உடைந்தது. 

சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது வேண்டுராயபுரம். இந்தக் கிராமத்தில் அண்மைக்காலமாக ஆடு, கோழிகள் திருடு போயுள்ளன. பக்கத்து கிராமமான துலுக்கப்பட்டியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அங்கு அதிகாலை வேளையில் சுற்றித்திரிந்ததாக் கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்து அவர்களை வேண்டுராயபுரம் மக்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

தாக்குதலில் காயமடைந்த சக்தி என்ற இளைஞர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சம்பவத்தைக் கண்டித்து துலுக்கப்பட்டி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களில் பெண்கள் கணிசமாக இருந்ததால், பெண் போலீசார் வரவழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அப்போது மறியலில் ஈடுபட்ட பெண்களில் ஒருவர் மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்கப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். அங்கு பாதுகாப்புக்கு வந்த பெண் காவலர்களில் ஒருவர் மண்ணெண்ணைக் கேனை பிடுங்கச் சென்றபோது நடந்த போராட்டத்தில் பெண் காவலரின் மண்டை உடைந்தது.

காயமடைந்த பெண் காவலர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

துலுக்கப்பட்டி - வேண்டுராயபுரம் பகுதி மக்கள் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்க, நூற்றுக்கணக்கான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments