ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதை கண்காணிக்க குழு அமைத்து தமிழக அரசு அரசாணை

0 3138
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதை கண்காணிக்க குழு அமைத்து தமிழக அரசு அரசாணை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் தேவையை பூர்த்தி செய்வதற்காக, அதனை உற்பத்தி செய்ய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.

இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தியை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இக்குழுவில் சார் ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். ஆலையின் நிலை குறித்த உத்தரவுகளை பிறப்பிக்க கண்காணிப்பு குழுவுக்கு அதிகாரம் இருப்பதாகவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments