அமெரிக்கா மற்றும் எகிப்தில் இருந்து 4.5 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து இறக்குமதி..! முதல்கட்டமாக 75 ஆயிரம் ரெம்டெசிவிர் குப்பிகள் இன்று வந்து சேர்கின்றன

0 1767
அமெரிக்கா மற்றும் எகிப்தில் இருந்து 4.5 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து இறக்குமதி..! முதல்கட்டமாக 75 ஆயிரம் ரெம்டெசிவிர் குப்பிகள் இன்று வந்து சேர்கின்றன

ரெம்டெசிவிர் தட்டுப்பாட்டை நீக்க வெளிநாடுகளில் இருந்து அதை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் லைஃப்கேர் லிமிட்டெட் வாயிலாக இதற்கான ஆர்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி,அமெரிக்க மருந்து நிறுவனமான ஜிலெட் சயன்ஸஸ், எகிப்து நிறுவனமான ஏவா ஃபார்மா ஆகியவற்றில் இருந்து 4 லட்சத்து 50 ஆயிரம் குப்பிகள் ரெம்டெசிவிர் மருந்து இறக்குமதி செய்யப்படும்.

இதில் முதல்கட்டமாக 75 ஆயிரம் குப்பிகள் இன்று வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments