ஆந்திர மாநிலம் சித்தூரில் முன்னாள் எம்.பி. சகோதரர் வீட்டில் ரூ. 2 கோடி மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை

0 750
ஆந்திர மாநிலம் சித்தூரில் முன்னாள் எம்.பி. சகோதரர் வீட்டில் ரூ. 2 கோடி மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை

ந்திர மாநிலம் சித்தூரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆதிகேசவலு சகோதரர் வீட்டில் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பொருட்களைக் கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

முன்னாள் எம்பி ஆதிகேசவலுவின் சகோதரரும், தமிழக முன்னாள் தலைமைச் செயலர் ராம்மோகன் ராவின் உறவினருமான பத்ரி நாராயணா சித்தூரில் குடியிருந்து வருகிறார்.

இரவில் வீட்டைப் பூட்டிவிட்டு உறங்கிய இவர் காலையில் பணம் எடுப்பதற்காகப் பீரோவைத் திறக்கச் சென்றார். அப்போது பீரோ ஏற்கெனவே திறக்கப்பட்டுப் பொருட்கள் சிதறிக் கிடந்ததைக் கண்டார்.

பீரோவில் இருந்த தங்க நகைகள், பணம் என இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளைபோனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அவர் தகவல் தெரிவித்ததை அடுத்து வீட்டுக்கு வந்த காவல்துறையினர் தடயங்களைச் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments