கொரோனா பரவல் காரணமாக வெற்றி கொண்டாட்டங்களை தவிர்க்குமாறு தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

0 10732
கொரோனா பரவல் காரணமாக வெற்றி கொண்டாட்டங்களை தவிர்க்குமாறு தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

கொரோனா பரவல் காரணமாக வாக்கு எண்ணிக்கை அன்று வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெருந்தொற்று காரணமாக மக்கள் அவதிக்குள்ளாகியுள்ள சூழலில் தேர்தல் முடிவுகளை ஊடகங்கள் மூலம் தெரிந்து கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

வாக்கு எண்ணும் இடங்களில் தொண்டர்கள் குவிந்து மகிழ்ச்சியை தெரியப்படுத்தி தொற்றுக்கு ஆளாக வேண்டாம் எனவும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

வெற்றிக்கொண்டாட்டங்களை விட உயிர்களை பாதுகாப்பது தான் தனது தலையாய கடமை என குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின், மாற்றுக் கட்சித் தோழர்களும் தன்னுடைய வேண்டுகோளை ஏற்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments