வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

0 4380
வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

ளிமண்டல சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், தமிழகத்தின் சில மாவட்டங்களில் வருகிற 5-ம் தேதிவரை மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மற்றும் தென் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.

நாளை முதல் 4 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களை உள்ளடக்கி, சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் அதிகபட்ச பகல்நேர வெப்பநிலை, 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும், கடலோர மாவட்டங்களில் காற்றின் இயல்பு வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments