வாக்கு எண்ணிக்கைக்கு தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து உயர் நீதிமன்றம் திருப்தி

0 1386
வாக்கு எண்ணிக்கைக்கு தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து உயர் நீதிமன்றம் திருப்தி

கொரோனா பரவலைத் தடுக்கத் தேர்தல் ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பின்பற்றி அரசியல் கட்சித் தலைவர்கள் எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

வாக்கு எண்ணிக்கையின்போது கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஏற்பாடுகளைச் செய்யக் கோரிய வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வாக்கு எண்ணிக்கையின் போது மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்துத் தேர்தல் ஆணையம், தமிழக அரசு ஆகியன சார்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த அறிக்கை திருப்தி அளிப்பதாகத் தெரிவித்த நீதிபதிகள், இந்த விதிகளை அரசியல் கட்சியினர், ஊடகத்தினர் கண்டிப்புடன் பின்பற்றி ஒத்துழைக்க அறிவுறுத்தினர்.

வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபடவும், பட்டாசுகள் வெடிக்கவும், ஊர்வலம் செல்லவும் கூடாது என அரசியல் கட்சியினருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதில் அரசியல் கட்சித் தலைவர்கள் எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும் எனத் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments