லாரிக்கு அடியில் சிக்கிக் கொண்ட கன்றுக்குட்டி : குட்டியை காப்பாற்ற முயன்ற தாய் பசுவின் பாச போராட்டம்

0 3765
லாரிக்கு அடியில் சிக்கிக் கொண்ட கன்றுக்குட்டி : குட்டியை காப்பாற்ற முயன்ற தாய் பசுவின் பாச போராட்டம்

புதுக்கோட்டையில் லாரிக்கு அடியில் சிக்கிக் கொண்ட கன்று குட்டியை காப்பாற்ற முயன்ற தாய் பசுவின் பாச போராட்டம் காண்போரை நெகிழ வைக்கிறது.

கீழ இரண்டாம் வீதியில் கடைக்கு சரக்கு இறக்குவதற்காக நின்று கொண்டிருந்த லாரிக்கு அடியில் அவ்வழியாக தாய் பசுவுடன் வந்த கன்றுக்குட்டி சிக்கிக் கொண்டது. லாரிக்கு அடியில் மாட்டிக் கொண்டு வெளியே வர முடியாமல் தவித்த கன்றுக்குட்டியை மீட்க தாய் பசு அங்கும், இங்கும் ஓடியது.

அதற்குள் அங்கிருந்த பொதுமக்கள் வந்து கன்று குட்டியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும், மனம் கேட்காத அந்த தாய் பசு, கன்றுக் குட்டியை மீட்பதற்காக லாரியை சுற்றி சுற்றி வந்தது.

பின்னர், அங்கிருந்தவர்கள் பத்திரமாக கன்றுக்குட்டியை மீட்டனர். வெளியே வந்த கன்றுக்குட்டி தாய் பசுவை நோக்கி ஓடவே, தாய் பசுவும் கன்றுக்குட்டியை நோக்கி ஓடி வந்து ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்திக் கொண்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments