கொரோனா நோயாளிகளுக்கான 108 ஆம்புலன்ஸ்கள் 240 ல் இருந்து 351 ஆக அதிகரிப்பு..!

0 1987
கொரோனா நோயாளிகளுக்கான 108 ஆம்புலன்ஸ்கள் 240 ல் இருந்து 351 ஆக அதிகரிப்பு..!

மிழகம் முழுதும் கொரோனா பாதித்தவர்களை அழைத்து செல்ல உதவும் 108 அவசர ஊர்திகளின் எண்ணிக்கை 240 ல் இருந்து 351 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள 108 அவசர ஊர்திகளின் எண்ணிக்கை ஆயிரத்து 303 ஆகும்.இவற்றில் 210 வாகனங்கள் மட்டுமே இது வரை கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வந்தன.

இவற்றின் வாயிலாக தினமும் 2 ஆயிரத்து 500 தொற்றாளர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் நிலையில், அவசர ஊர்திகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு 60 அவசர ஊர்திகளும், திருவள்ளூருக்கு 25, செங்கல்பட்டுக்கு 15, காஞ்சிபுரத்திற்கு 10 ஊர்திகளும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் இந்த வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments