கிருஷ்ணகிரி அருகே காரும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒருவர் பலி

0 1290
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி, தீப்பற்றி எரிந்த விபத்தில் உயிரிழந்த இளைஞர் பெங்களூருவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி, தீப்பற்றி எரிந்த விபத்தில் உயிரிழந்த இளைஞர் பெங்களூருவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

பெங்களூருவில் இருந்து ஹீரோ பேஷன் பைக்கில் இரண்டு இளைஞர்கள் ஊத்தங்கரை நோக்கிச் சென்றுள்ளனர்.

ஊத்தங்கரை தீரன் சின்னமலை பள்ளி அருகே எதிரே வந்த மாருதி பிரெசா கார் மீது மோதியதில் இரண்டு இளைஞர்களில் ஒருவர் உயிரிழந்தார். அவர் பெயர் மஞ்சுநாத் என்பதும் பெங்களூருவைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. உடன் வந்தவர் அவருடைய நண்பர் சசி என்பதும் தெரியவந்துள்ளது.

மோதிய வேகத்தில் சாலையோரம் இறங்கிய இரண்டு வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன. இளைஞர்கள் கொண்டு வந்த பையில் மது பாட்டில்கள் இருந்ததை வைத்து, அவர்கள் குடித்துவிட்டு வண்டி ஓட்டி வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments