அமெரிக்க தூதரக ஊழியர்களின் குடும்பத்தினர் விரும்பினால் உடனே நாடு திரும்பலாம் -அமெரிக்க அரசு

0 1879
அமெரிக்க தூதரக ஊழியர்களின் குடும்பத்தினர் விரும்பினால் உடனே நாடு திரும்பலாம் -அமெரிக்க அரசு

ந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் பணியாற்றுபவர்களின் குடும்பத்தினர் விரும்பினால் உடனே நாடு திரும்பலாம் என அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் மோசமாக இருப்பதால் இந்தியா வந்துள்ள அமெரிக்க பயணிகள் விரைவாக திரும்பி வர வேண்டும் என அமெரிக்க அரசு நேற்று சுகாதார எச்சரிக்கை வெளியிட்டது.

அதன் தொடர்ச்சியாக, இப்போது தூதரக ஊழியர்களின் குடும்பத்தினரும் நாடு திரும்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது கட்டாயமில்லை என்றும் அவரவர் விருப்பத்தை பொறுத்தது எனவும் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments