அமெரிக்காவின் முதலாவது மருத்துவ உதவிகள் டெல்லி வந்தடைந்தன

0 928

மெரிக்காவில் இருந்து அனுப்பப்பட்ட ஆக்சிஜன், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றை சுமந்து கொண்டு முதலாவது விமானம் இன்று காலை டெல்லி வந்து சேர்ந்தது.

400 க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டிகள், சுமார் 10 லட்சம் கொரோனா சோதனை கிட்டுகள் மற்றும் இதர மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவை அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான சூப்பர் கேலக்சி விமானத்தில் வந்தடைந்தன.

அமெரிக்காவில் இருந்து கொரோனா மருத்துவ உதவிகள் இன்னும் இதுபோல பலமுறை இந்தியாவுக்கு வரும் என ட்விட்டர் பதிவு ஒன்றில், அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

70 ஆண்டு கால நல்லுறவின் பின்னணியில், கொரோனாவில் இருந்து விடுபட இந்தியாவுக்கு அமெரிக்கா துணை நிற்கும் என்ற ஹேஷ்டாக்கும் அதில் இடம் பெற்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments