இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 3,86,452 பேருக்கு கொரோனா..! தொடர்ந்து 9ஆவது நாளாக, 3 லட்சத்திற்கும் மேல் பாதிப்பு

0 2462
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 3,86,452 பேருக்கு கொரோனா..! தொடர்ந்து 9ஆவது நாளாக, 3 லட்சத்திற்கும் மேல் பாதிப்பு

ந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு மேலும் ஒரு புதிய உச்சம் தொட்டுள்ளதோடு, தொடர்ந்து 9ஆவது நாளாக, 3 லட்சத்திற்கும் மேல் பாதிப்பு பதிவாகியுள்ளது.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 3 லட்சத்து 86 ஆயிரத்து 452 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் பெருந்தொற்றுக்கு 3 ஆயிரத்து 498 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிகிச்சை மூலம் குணம்பெற்று 2 லட்சத்து 97 ஆயிரத்து 540 பேர் வீடு திரும்பியுள்ளனர். நாட்டில் கொரோனா பாதித்து குணமடைபவர்களின் விகிதம் 81.99 சதவீதம் ஆக உள்ளது.

கொரோனா பாதித்து 31,70,228 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரையிலான மொத்த பாதிப்பில், சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 16.90 சதவீதம் ஆகும். 15 கோடியே 22 லட்சத்து 45 ஆயிரம் பேருக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments