சென்னை உயர்நீதிமன்றம், மதுரைக் கிளைக்கு விடுமுறை : மே 1 - 31ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிப்பு

0 1016
சென்னை உயர்நீதிமன்றம், மதுரைக் கிளைக்கு விடுமுறை : மே 1 - 31ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிப்பு

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் மே 1 ம் தேதி முதல் 31ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசர வழக்குகளை விசாரிக்க எட்டு நாட்கள் விடுமுறை கால நீதிமன்றம் இயங்கும்.

இதன்படி, மே மாதம் முதல் வாரத்தில் 3 மற்றும் 4 ம் தேதிகளில் அவசர வழக்குகளை தாக்கல் செய்யலாம் எனவும், இந்த வழக்குகள் மே 5 மற்றும் 6 ம் தேதிகளில் விசாரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரந்தோறும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் மனுத்தாக்கலும், புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் விசாரணையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments