கொரோனா பரவலைத் தடுக்க 14 மாதங்களாக மத்திய அரசு என்ன செய்தது ? மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

0 2070
கொரோனா பரவலைத் தடுக்க 14 மாதங்களாக மத்திய அரசு என்ன செய்தது ? மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

கொரோனா பரவலைத் தடுக்கக் கடந்த 14 மாதங்களாக மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது எனச் சென்னை உயர் நீதிமன்றம் வினவியுள்ளது.

ரெம்டிசிவிர் மருந்து, ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து எடுத்த வழக்கு, தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு வழக்கறிஞர், கொரோனா பரவலைத் தடுக்க எடுத்த நடவடிக்கைகளைப் பட்டியலிட்டதுடன் கொரோனா இரண்டாவது அலை எதிர்பாராதது எனக் குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, கடந்த 14 மாதங்களாக மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது என வினவினார்.

கொரோனாவைத் தடுக்க வல்லுநர்களின் ஆலோசனைகளைப் பெற்றுத் திட்டமிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவ்வப்போது சூழலுக்கு ஏற்றவாறு நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments