இந்தியாவுக்கு உதவ நாற்பதுக்கு மேற்பட்ட நாடுகள் உறுதி - வெளியுறவு அமைச்சகம்

0 1254
இந்தியாவுக்கு உதவ நாற்பதுக்கு மேற்பட்ட நாடுகள் உறுதி - வெளியுறவு அமைச்சகம்

நாற்பதுக்கு மேற்பட்ட நாடுகள் இந்தியாவுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சிஜன் உற்பத்திக் கருவிகளை வழங்க உறுதியளித்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் இருந்து ஆக்சிஜன் உற்பத்திக் கருவிகளை ஏற்றிக்கொண்டு இரண்டாவது விமானம் இன்று டெல்லிக்கு வந்தது.

ரஷ்யாவில் இருந்து மனிதநேய உதவியாக வென்டிலேட்டர்கள், 22 டன் மருந்துப் பொருட்கள் ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு 2 விமானங்கள் இன்று டெல்லிக்கு வந்தடைந்தன.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுச் செயலர் ஹர்சவர்த்தன் சிரிங்லா, நாற்பதுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் இந்தியாவுக்கு உதவ உறுதியளித்துள்ளதாகவும், நாட்டில் 550 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளைத் தொடங்கப் பல நாடுகளுடன் பேச்சு நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments