அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

0 1542
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவத்திற்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது.

1991 முதல் 1996 ஆம் ஆண்டுவரை சின்னசேலம் தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்த பரமசிவம் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது.

இந்தவழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், பரமசிவத்துக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 33 லட்சத்து 4 ஆயிரத்து 168 ரூபாய் அபராதமும் விதித்தது.

இதனை எதிர்த்து பரமசிவம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், சொத்துக்களை மதிப்பீடு செய்ததில் தவறுகள் இருப்பதை சுட்டிக்காட்டி, பரமசிவத்தின் தண்டனையை நிறுத்திவைத்ததுடன் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments