மேற்கு வங்கத்தில் இறுதிக்கட்டமாக 35 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு : 76 விழுக்காட்டுக்கு மேல் வாக்குகள் பதிவு

0 636
மேற்கு வங்கத்தில் இறுதிக்கட்டமாக 35 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு : 76 விழுக்காட்டுக்கு மேல் வாக்குகள் பதிவு

மேற்கு வங்கத்தில் இறுதிக்கட்டமாக 35 தொகுதிகளுக்கு நடைபெற்ற வாக்குப்பதிவில் 76 விழுக்காட்டுக்கு மேல் வாக்குகள் பதிவாகியுள்ளன.

இன்று எட்டாம் மற்றும் இறுதிக்கட்டமாக 4 மாவட்டங்களில் உள்ள 35 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

கொரோனா விதிகளைக் கடைப்பிடித்து மக்கள் போதிய இடைவெளிவிட்டு வரிசையில் நின்று வாக்களித்தனர். நடிகர் மிதுன் சக்கரவர்த்தி கொல்கத்தாவின் காசிப்பூரில் வாக்களித்தார்.

மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கரும் அவர் மனைவியும் கொல்கத்தா சவுரிங்கீயில் வாக்களித்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.

காங்கிரஸ் மாநிலத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மூர்சிதாபாத்தில் வாக்களித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments