கடத்தப்பட்ட சிறுவன் தப்பினான்... கடத்தல்காரர்கள் 2 பேர் சிக்கினர்.!

0 3467

சென்னையில் மிரட்டிப் பணம் பறிக்கும் நோக்கில் கடத்தப்பட்ட சிறுவன், தப்பி வந்து கடத்தல்காரர்களைக் காவல்துறையினரிடம் சிக்கவைத்துள்ளான்.

கொளத்தூரைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் வீட்டு முன் நின்றபோது அவ்வழியாக ஆட்டோவில் வந்த இருவர், வண்ண மீன்கள் கடையின் முகவரி கேட்டுள்ளனர். கடையைக் காட்டச் சென்ற சிறுவனை ஆட்டோவில் ஏற்றிக் கடத்திச் சென்றுள்ளனர்.

சிறுவனை ஒரு வீட்டுக்குக் கூட்டிச் சென்று மிரட்டிப் பணம் பறிக்க அவனது தந்தையின் தொலைபேசி எண்ணைக் கேட்டுள்ளனர். தொலைபேசி எண் தெரியாது எனக் கூறியதால் அங்கு வைத்துப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர். அங்கிருந்து தப்பிய சிறுவன் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரிடம் உதவி கேட்டு வீட்டுக்கு வந்து, நடந்ததைத் தந்தையிடம் கூறியுள்ளான்.

இது குறித்த புகாரில் ராஜமங்கலம் காவல்துறையினர் சிறுவனின் உதவியுடன் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் அவனைப் பூட்டி வைத்த வீட்டை அடையாளம் கண்டனர்.

அந்த வீட்டில் இருந்த லோகேஸ்வரன், அஜித் குமார் ஆகியோரைப் பிடித்து விசாரித்ததில், பணம் கேட்டுச் சிறுவனைக் கடத்தியதும், சிறுவனுக்கு ஓரினச் சேர்க்கை தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்துப் பணம் கேட்டு ஆட்கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 8 பிரிவுகளில் வழக்குப் பதிந்து அவர்களைக் கைது செய்தனர். லோகேஸ்வரன் மீது ஏற்கெனவே ஆட்கடத்தல் வழக்கும், கொலை வழக்கும் நிலுவையில் உள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments