கோவாக்சின் தடுப்பூசி விலை ரூ.200 குறைப்பு - பாரத் பயோடெக் நிறுவனம் அதிரடி அறிவிப்பு

0 5063

கோவாக்சின் தடுப்பூசியின் ஒரு டோஸ் விலையை 200 ரூபாய் குறைக்கப்படுவதாக பாரத் பயோடெக் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கோவிஷீல்டு, மற்றும் கோவேக்சின் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவரும் நிலையில், அதன் விலையை குறைக்குமாறு சீரம் மற்றும் பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்களிடம், மத்திய, மாநில அரசுகள் கேட்டுக்கொண்டன. இதனையடுத்து மாநிலங்களுக்கான கோவிஷீல்டு தடுப்பூசியின் ஒரு டோஸ் விலை 100 ரூபாய் குறைக்கப்பட்டது.

இந்நிலையில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் கோவாக்சின் தடுப்பூசி விலை ஒரு டோஸ் ரூ.600லிருந்து ரூ.400ஆக குறைக்கப்படுவதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments