உ. பி.யில் கொரோனா தொற்று அதிகரிப்பு : வார இறுதி ஊரடங்கு மேலும் ஒரு நாள் நீட்டிப்பு

0 1118

த்தரப்பிரதேசத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், வார இறுதி ஊரடங்கு மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 29 ஆயிரம் பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 266 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கட்கிழமை காலை 7 மணி வரை முழு ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது.

இதனை மேலும் ஒரு நாள் நீட்டித்து வெள்ளிக்கிழமை இரவு முதல் செவ்வாய்கிழமை காலை 7 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments