எம்ஜிஆர் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக பணியாற்றிய செ.அரங்கநாயகம் காலமானார்

0 3272
எம்ஜிஆர் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக பணியாற்றிய செ.அரங்கநாயகம் காலமானார்

முன்னாள் அமைச்சரும், திராவிட இயக்க மூத்த தலைவர்களில் ஒருவருமான செ.அரங்கநாயகம் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 90 .

வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த செ.அரங்கநாயகத்தின் உயிர் பிற்பகலில்  பிரிந்தது. இவர், MA., Bed , BL பட்டம் பெற்றிருந்தார். 

மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக பணியாற்ரிய செ.அரங்கநாயகம், தமிழகத்தில் என்ஜினீயரிங் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர்.

அதிமுக வரலாற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் MLA என்ற பெருமையை பெற்ற இவர், தொண்டாமுத்தூர் தொகுதியில் இருந்தும், கோவை மேற்கு தொகுதியில் இருந்தும் தமிழக சட்டப்பேரவைக்கு மொத்தம் 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments