நெல்லை மாவட்டத்தின் கடற்கரை பகுதிகளில் நில அதிர்வு

0 3516

திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.

நெல்லையின் கடற்கரை கிராமங்களான கூடன்குளம், கூட்டபுளி, பெருமணல், பஞ்சல், கள்ளிகுளம், வள்ளியூர், செட்டிகுளம், இடிந்தகரை, வடக்கன்குளம்,உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது.

அதேபோல், கன்னியாகுமரியின் லீபுரம், அழகப்பபுரம், சுசீந்திரம், நாகர்கோவில், ஒற்றைஆள்விளை உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. சுமார் ஐந்து வினாடிகள் உணரப்பட்ட இந்த நில அதிர்வால் பெரிய சேதங்கள் ஏதுவும் ஏற்படாத சூழலில் அச்சத்தில் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறினர். 

இதனிடையே லேசான நில அதிர்வே உணரப்பட்டதால் கூடங்குளம் அணு உலைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments