ஜெர்மனியில் நோயாளிகளை தாக்கிய மருத்துவமனை ஊழியர் : சிகிச்சைக்காக வந்த 4 பேர் உயிரிழப்பு

0 1255
ஜெர்மனியில் நோயாளிகளை தாக்கிய மருத்துவமனை ஊழியர் : சிகிச்சைக்காக வந்த 4 பேர் உயிரிழப்பு

ஜெர்மனி மருத்துவமனையில் தாக்குதல் நடத்திய பெண், 4 பேரை கொலை செய்த சம்பவம் அங்கு அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

போட்ஸ்டம் நகரிலுள்ள மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிய 51 வயதான பெண் ஊழியர் ஒருவர், நோயாளிகளிடம் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.

அவர், அங்கு சிகிச்சை பெற்றுவந்த 5 பேரை தாக்கியதில் 4 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார். தகவலறிந்து நிகழ்விடத்திற்குவந்த போலீசார், அப்பெண்ணை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தாக்குதலுக்கான காரணம் தெரியாத நிலையில் அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments