கணவனுடன் சேர்ந்து வாழ கட்டாயப்படுத்தியதால் விஷம் கொடுத்து 2 பெண் குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை முயற்சி

0 2055
கணவனுடன் சேர்ந்து வாழ கட்டாயப்படுத்தியதால் விஷம் கொடுத்து 2 பெண் குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை முயற்சி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கணவருடன் சேர்ந்து வாழ மறுத்து, இரண்டு பெண் குழந்தைகளுக்கு எலிமருந்து கொடுத்து கொன்று விட்டு, தாயும் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல்லடத்தைச் சேர்ந்த பிரபு - தமிழ்ச்செல்வி தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் இருந்தனர்.

9 மாதங்களுக்கு முன் பிரபுவை பிரிந்த தமிழ்ச்செல்வி இரண்டு குழந்தைகளுடன் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளார்.

இதனிடையே கணவனுடன் சேர்ந்து வாழக்கூறி உறவினர்கள் தமிழ்ச்செல்வியை கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால், மனமுடைந்த தமிழ்ச்செல்வி, இரண்டு பிள்ளைகளுக்கும் எலி மருந்து கொடுத்து கொன்று விட்டு, தானும் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments