விண்ணில் தனக்கென பிரத்யேக ஆய்வு மையத்தை அமைப்பதற்கான கட்டமைப்பை ஏவிய சீனா

0 1323
விண்ணில் தனக்கென பிரத்யேக ஆய்வு மையத்தை அமைப்பதற்கான கட்டமைப்பை ஏவிய சீனா

விண்ணில் தனக்கென பிரத்யேக ஆய்வு மையத்தை அமைத்துவரும் சீனா, அதற்கான கட்டுப்பாட்டு அமைப்பை வெற்றிகரமாக செலுத்தியது.

ஹைனான் (Hainan ) மாகாணத்தில் இருந்து லாங்மார்ச் என்ற ராக்கெட் மூலம் ஏவப்பட்ட, 66 டன் எடைக்கொண்ட தியான்ஹே சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதாக சீன ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தியான்ஹே என்ற அந்த அமைப்பு, விண்வெளி ஆய்வு மையத்தின் மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டு மையமாகவும், பணியாளர்களின் முக்கிய வாழ்க்கை இடமாகவும் செயல்படும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

விண்ணில் தனக்கென பிரத்யேக விண்வெளி மையத்தை அமைத்துவரும் சீனா, அடுத்த ஆண்டு முதல் அங்கு ஆய்வை தொடங்கவுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments