உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை மிரட்டும் தொனியில் பேசியதாக, தமிழக பா.ஜ.க. சார்பில் நடிகர் சித்தார்த்தை கைது செய்யக்கோரி புகார்

0 4706

த்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை மிரட்டும் தொனியில் பேசியதாக நடிகர் சித்தார்த் மீது தமிழக பா.ஜ.க. சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் ஆக்சிஜன் இல்லை என பொய் கூறும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார். இந்த செய்தியை ட்விட்டரில் பதிவிட்டு நடிகர் சித்தார்த், பதில் கருத்து கூறியிருந்தார்.

இந்த நிலையில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை மிரட்டும் தொனியில் பேசி, தீவிரவாத செயலை தூண்டியதாக சித்தார்த் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தன்னுடையே செல்போன் எண்ணை பா.ஜ.க.வினர் சமூக வலைதளத்தில் பரப்பிவிட்டு, ஆபாசமாகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேச வைப்பதாகவும், தானும் போலீசில் புகாரளித்துள்ளதாகவும் சித்தார்த் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments