மு.க.அழகிரி மீதான நில அபகரிப்பு வழக்கில் சில பிரிவுகள் பொருந்தாது - மாவட்ட நீதிமன்றம்

0 1731
மு.க.அழகிரி மீதான நில அபகரிப்பு வழக்கில் சில பிரிவுகள் பொருந்தாது - மாவட்ட நீதிமன்றம்

நில அபகரிப்பு வழக்கில் மு.க.அழகிரி மீதான சில பிரிவுகள்  பொருந்தாது என மதுரை மாவட்ட நீதிமன்றம் கூறியதை ரத்து செய்யக் கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

மு.க.அழகிரி மத்திய அமைச்சராக இருந்தபோது சிவரக்கோட்டையில் தயா பொறியியல் கல்லூரியைக் கட்டினார். அப்போது விநாயகர் கோவிலுக்குச் சொந்தமான 44 சென்ட் நிலத்தை அபகரித்ததாக அழகிரிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் சில பிரிவுகள் பொருந்தாது என உத்தரவிட்டது. இதை எதிர்த்து அரசு சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணவல்லி, சென்னை உயர்நீதிமன்றச் சுற்றறிக்கையின் அடிப்படையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அழகிரி மீதான வழக்கு விசாரணையைச் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments