வாக்குறுதிகளை நிறைவேற்றாத மக்கள் பிரதிநிதிகள் மீது நடவடிக்கை கோரிய பொதுநல வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர் நீதிமன்றம்?

0 863
வாக்குறுதிகளை நிறைவேற்றாத மக்கள் பிரதிநிதிகள் மீது நடவடிக்கை கோரிய பொதுநல வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர் நீதிமன்றம்

தேர்தலின் போது வாக்குறுதிகளை கொடுத்து, வெற்றி பெற்றபிறகு நிறைவேற்றாத வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய பொதுநல வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.

வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறும் மக்கள் பிரதிநிதிகள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் விதிகளில் இடமில்லை என்பதால் தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை என மனுதார ர் புகார் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி அமர்வு, இந்த விவகாரம் ஏற்கனவே நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதால், இந்த வழக்கில் எவ்வித உத்தரவும் பிறப்பிக்க அவசியமில்லை எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments