சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டுக்கு 150 மருத்துவர்கள், 150 செவிலியர்கள் தேர்வு..!

0 2266
சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டுக்கு 150 மருத்துவர்கள், 150 செவிலியர்கள் தேர்வு..!

சென்னையில் கொரோனா தடுப்பு மற்றும் கண்காணிப்புக்காக, மாநகராட்சி சார்பில் தலா 150 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை தேர்வு செய்யும் பணி துவங்கி உள்ளது.

இவர்கள் ஓராண்டுகால ஒப்பந்தத்தில் பணியமர்த்தப்படுவார்கள். மருத்துவர்களுக்கு மாத ஊதியமாக 60 ஆயிரம் ரூபாயும், செவிலியர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.

இதற்கான நேர்காணல் இன்றும் நாளையும் ரிப்பன் மாளிகையில் நடக்கிறது. இன்று நடைபெற்ற நேர்காணலில் பங்கேற்பதற்காக 200க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் அசல் சான்றிதழ்களுடன் காலை முதல் வரிசையில் காத்திருந்தனர்.

தேர்வு செய்யப்படுபவர்கள் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்,கோவிட் கேர் மையங்கள் உள்ளிட்ட இடங்களில் நியமிக்கப்படுவார்கள். பணி நிரந்தரம் செய்யக்கோரி எவ்வித போராட்டத்திலும் ஈடுபட மாட்டோம் என்பதற்கான ஒப்புதல் படிவத்தில் கையெழுத்து பெற்ற பிறகு பணி ஆணை வழங்கப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments