வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு உடல் வெப்ப நிலை 98.6 டிகிரிக்கு மேல் இருந்தால் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதி இல்லை - சத்யபிரதா சாஹூ

0 2263

வாக்கு எண்ணும் மையத்தில் பரிசோதிக்கும்போது முகவர்களுக்கு இயல்பு வெப்பநிலைக்கும் அதிகமாக இருந்தால் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியப்பிரத சாகு தெரிவித்துள்ளார்.

மே இரண்டாம் தேதி 76 இடங்களில் வாக்கு எண்ணிக்கைக்கான விரிவான ஏற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியப்பிரத சாகு, முகவர்கள் கொரோனா இல்லை எனச் சான்றிதழ் வைத்திருந்தாலும் தடுப்பூசி போட்ட சான்றிதழ் வைத்திருந்தாலும், உடல் வெப்பநிலை 98 புள்ளி 6 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் இருந்தால் அவர்கள் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments